இலங்கையில் கடந்த 81 நாட்களில் 508 பேர் வீதி விபத்துக்களில் உ.யிரிழப்பு

இலங்கையில் கடந்த 81 நாட்களில் 508 பேர் வீதி விபத்துக்களில் உ.யிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 483 பேர் அபாயகரமான விபத்துக்களால் ப.லியாகியுள்ளனர் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், 1054 பேருக்குப் படுகாயங்களும், 2 ஆயிரத்து 488 பேருக்குச் சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த நேற்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்குக் கடுமையான சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like