வவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

வவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

வவுனியா முதலாம் குருக்குத்தெரு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முதலாம் குருக்குதெரு வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like