கிளிநொச்சியில் 55ஆவது நாளாக தொடரும் போராட்டம்..

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 55ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரையிலும் தொடர்கிறது.

இந்த போராட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like