நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் நாசகார செயல்! அதிருப்தியில் இந்துக்கள்

யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தில்….

யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தில் வி.சமிகள் சிலர் கழிவு ஒயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று இந்த நாசகார செயல் செய்யப்பட்டுள்ளது.

நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஒயிலை வி.சமிகள் ஊற்றி வைத்துள்ளனர்.

இந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றும் நல்லூரான் ஆலயத்தில், வி.சமிகள் இவ்வாறு செய்துள்ளமைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நல்லூர் ஆலயத்தின் புனித்தன்மையை கெடுப்பதற்காக இவ்வாறு கழிவு ஒயிலை ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like