நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது : வெளியாகிய தகவல்

நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.கம்புறுபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையான 22 மில்லியன் பேரில் 18 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.இவ்வாறு நாட்டில் வசித்து வரும் 18 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டை குறித்து மட்டுமே அரசியல்வாதிகள் கரிசனை காட்டுவார்கள் எனவும், அரசியல் கட்சிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடையாள அட்டை பற்றி கவலைப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவே மிகவும் கவலையான நிதர்சனமாகும் என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

You might also like