பசறை கோரவிபத்து -பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுவிபரம் வெளியானது

பசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்ளுக்கான நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 95 ஆயிரம் ரூபாவும் மற்றும் காயமடைந்த 32 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதமும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டுள்ளது.

லுணுகலை பல்நோக்கு கட்டடத்தில் வைத்து குறித்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் 30 ஆயிரம் ரூபாவும், போக்குவரத்து ஆணைக்குழுவினால் 25 ஆயிரம் ரூபாவும், குத்தகை நிறுவனத்தினால் 25 ஆயிரம் ரூபாவும் மற்றும் ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் 15 ஆயிரம் ரூபாவும் உயிரிழந்தவர்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழுவினரால் குறித்த 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

பசறை – லுணுகல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், கடந்த 20ம் திகதி பசறை – 13ம் கட்டைப் பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் 30திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

You might also like