உலகப் பொருளாதாரமே முடங்கும் நிலை – இலங்கையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்

சுயஸ் கால்வாயில் குறுக்காகத் தரித்து நிற்கும் பாரிய கொள்கலன் கப்பலால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது.

மணலுக்குள் புதைந்துள்ள இக்கப்பலை மீட்கும் பணிகள் இடம்பெற்றாலும், அதனை விடுவிப்பதற்கு சில நாட்கள் செல்லும் என்பதால் தினசரி சுமார் 10 பில்லியன் டொலர் பெறுமதியான சரக்கு வணிகம் முடங்கியுள்ளது.

சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு நேரம் செல்லச் செல்ல உலகளாவிய வர்த்தகத்துக்கு அடிவிழத் தொடங்கும். அதன்காரணமாக விலைவாசிகள் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரமே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இதனால் இலங்கையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like