கிளிநொச்சியில் மின்சாரம் தா.க்.கி நபரொருவர் ப.லி

கிளிநொச்சி …

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இன்று காலை நபரொருவர் மின்சாரம் தா.க்.கி உ.யிரிழந்துள்ளார்.

தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்த வேளையில் சுத்திகரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இந்த அ.னர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபரே உ.யிரிழந்துள்ளார்.

முறையற்ற வகையில் சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு மின் இணைப்பு வழங்கியதனால் மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like