இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த உரம் : வெளியான தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்கள் தரமற்றவை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 55 தர ஆய்வு அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இரசாயன உரங்களின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, அவுஸ்திரேலியாவில் ஒரு ஹெக்டேயருக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரத்தின் அளவு 50 கிலோ ஆகும்.

எனினும் இது இலங்கையில் ஒரு ஹெக்டேயருக்கு 300 கிலோவை தாண்டியுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

You might also like