நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு : பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை செலுத்துவதற்காக மாவட்ட செயலகங்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பலர் தனியார் நிறுவனங்களிடமிருந்து 25 முதல் 30 வட்டி வீதத்தில் நுண்நிதிக் கடன்களை வாங்கியவர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த கடன் தொகையை செலுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் ஊடாக கடன் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும் அதற்கு 6 வீத வட்டி அறவிடப்படும். குறித்த பணத்தை மாவட்ட செயலாளருக்கு தவணை பணமாக செலுத்த வேண்டும்.

குறித்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கடனாளியிடம் ஒப்படைக்காமல், கடன் பெற்ற நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு லட்சம் ரூபாய் கடன் வரம்பை மேலும் அதிகரிக்க ஜனாதிபதி செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் அடுத்த வாரம் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like