வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண் குழந்தை உயிரிழப்பு

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை சிகிச்சைபலனின்றி இன்று (15) பிற்பகல் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா இரணஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒருவருக்கு முதல் குழந்தை கிடைத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் குறித்த பெண் குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

சிசுவிற்கு பிறந்ததிலிருந்து இருதயம் சரியாக இயங்கவில்லை இதன் காரணமாக பேரதேனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டு சரியாகவில்லை.

தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் 6ஆம் விடுதியில் உயிரிந்துள்ளது.

குறித்த பெண் குழந்தை எதிர்வரும் 22ஆம் திகதி ஒருவயதினை அடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like