இறைச்சிக்காக மாடுகளை வெ.ட்டுவது குறித்த தடை – விரைவில் அமுல்?

மாடுகளை இ.றைச்சிக்காக வெ.ட்டுவது குறித்த தடை விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பௌத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தகவல் வௌயிட்டுள்ள அவர்,

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாடுகளை இ.றைச்சிக்காக வெ.ட்டுவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

மாடுகளை இ.றைச்சிக்காக வெ.ட்டுவதனை இலங்கையில் தடை செய்வது குறித்த புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான சட்ட வரைவு குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் சில மாதங்களில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இ.றைச்சிக்காக மாடுகளை வெ.ட்டுவது தடை செய்யப்பட்ட போதிலும் மா.ட்டி.றைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும்.இ.றைச்சிக்காக மா.டுகளை வெ.ட்டுவது தடை செய்வதன் மூலம் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் பி.ரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

வயது மு.திர்ந்த மாடுகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது. இ.றைச்சிக்காக மாடுகளை வெ.ட்டுவதனை தொழிலாளக் கொண்டவர்களுக்கு இந்தத் தடையினால் ஏற்படக்கூடிய பொருளாதார பா.திப்புக்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்குவது என்பது குறித்து இன்னும் யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like