இலங்கையில் திருமணப் பதிவு கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய 2500 ரூபாவரை திருமணப் பதிவுக் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருமண நாள் குறித்து அறிவிக்கப்பட்டு 12 நாட்களுக்குமுன் வீடுகளில் திருமணப் பதிவை நடத்தப்பட்டால் அதற்கான புதிய கட்டணமாக 1000 ரூபாவை நிர்ணயிக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தக்கட்டணமானது வெறும் 50 ரூபாவாகவே இருந்து வருகிறது.அதேபோல, திருமண மண்டபத்தில் வைத்து பதிவாளர் முன் பதிவுசெய்வதற்கான கட்டணத்தை 1500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணமும் 2012ஆம் ஆண்டிலிருந்து 50 ரூபாவாக உள்ளதோடு, பதிவாளருக்கு கொடுக்க வேண்டிய கட்டணமாக 3500 ரூபா என்பதை நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆலயங்களில் இடம்பெறும் திருமணங்களை பிரதேச செயலகத்தில் சென்று பதிவுசெய்ய பெறும் முத்திரைக் கட்டணம் 750 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You might also like