கிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம் அமைந்துள்ள பகுதியில் 5 பேர் கைது : தீவிர விசாரணை ஆரம்பம்

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு.தையல் தோ.ண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அமைப்பொன்றினால் பயன்படுத்தப்பட்ட அன்பு மு.காம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் பு.தை.யல் தோ.ண்ட முற்பட்ட போதே இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களிடமிருந்து பு.தையல் தோ.ண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள் இவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

You might also like