கிளிநொச்சியில் ஊடக கலை கலாச்சார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முழு நேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஊடக கலை கலாச்சார அமையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை சர்வமத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது.

இதேவேளை இந்த அமையம் ஊடகவியலாளர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான வே.கஜன் தலைமையில் இடம்பெற்றதோடு, அமையம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் குரு, பங்குத்தந்தை மௌலவி ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் உரிமைக்காக போராடுகின்ற ஊடக அமைப்புக்களுடன் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையிலும் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமையத்தின் புதிய நிர்வாக தெரிவு கிளிநொச்சி கனகபுரம் வீயில் அமைந்துள்ள பாரதி ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது

இதில் தலைவராக மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான வே.கஜனும், செயலாளராக ஊடகவியலாளர் க.ரவீந்திரராசாவும் மற்றும் பொருளாலராக ஊடகவியலாளர் அருள் ஜோன்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like