கணனி துறையில் வேலைவாய்புக்காக காத்திருப்பவர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி : பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data science, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற விசேட ஊகவியலாளர் மகாநாட்டில் துணை வேந்தர் இதனை தெரிவித்தார்.

இந்த மகாநாட்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் ரணதுங்கவும் கலந்து கொண்டார்.

தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறி திருத்தப்பட்டுள்ளது. இதனை இணைய வழி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனை அடுத்த ஜூன் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.ou.ac.lk/bsehons மற்றும் www.vgc.ac.lk. என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவுகின்ற மனித வளப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்பை வழங்குதல் மற்றும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே இந்த பாடநெறியின் விசேட நோக்கமாகும்..

தகவல் தொழில்நுட்பத் துறையில் போதிய அறிவுள்ளவர்களின் ஆளணி பற்றாக் குறையினால், தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் பெரிதும் பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பாடநெறியின் கீழ் 10,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். முதல் வருடத்தில் மாணவர்கள் ஒரு சில பாடங்களைக் கற்க வேண்டியதுடன், இரண்டாவது வருடத்தில் விசேட பட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். இதன்படி தகவல் தொழில்நுட்பம்,( Computer science, software engineering, Data science,) போன்ற பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

மேலும், இப்பாடநெறிக்கு குறைந்தபட்சக் கல்வி தகுதியாக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஏதேனுமொரு துறையில்ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் (ஒரே தடவையில் அல்ல) மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல். தாம் வசிக்கும் பிரதேசத்திலிருந்தே தமது தொழில் அல்லது ஏனைய விடயங்களுக்கு தடைகள் இல்லாமல் இந்தப் பாடநெறியைத் தொடர முடியும்.

மேலும் இந்தப்பாடநெறியானது, வார இறுதி நாட்களில் இடம்பெறுவதுடன், தொழில் செய்துகொண்டே இப்பாடநெறியைக் கற்க முடியும். மற்றும் 50 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் வீதம்.நியமிக்கப்படுவர்.

அத்துடன் பாடநெறிக் கட்டணத்தை செலுத்த மற்றும் கணனிகளைக் கொள்வனவு செய்வதற்கும் விசேட கடன் சலுகைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

இங்கு கருத்து தெரிவித்த ஸ்லெஸ்கொம் நிறுவனத்தின் தலைவர், 2025 ஆம் ஆண்டளவில் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளி நாட்டு வருமானத்தை பெறுவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.

மேலும் இதற்காக சுமார் 2 லட்சம் மனித வளங்கள் தேவையானபோதிலும் நாட்டில் தற்போது ஒரு லட்சத்துப் பதினையாயிரம் மனித வளங்களே காணப்படுகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு குறைந்தபட்சம் வருடந்தோறும் கிட்டத்தட்ட 12,000 பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரவேசிக்க வேண்டும்.

அத்துடன், இந்த மனித வளமானது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாத்திரம் என்பதுடன், வங்கி உட்பட ஏனைய நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக விசேட கேள்வி காணப்படுகின்றது.

கணனித்துறையில் நிலவுகின்ற மனித வளப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்குடன் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்பை வழங்குதல் மற்றும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே இந்த பாடநெறியின் விசேட அம்சமாகும்.

கணனித் துறை பற்றிய போதிய அறிவுள்ளவர்களின் ஆளணி பற்றாக்குறையினால், கணினித் துறையின் எதிர்காலம் பெரிதும் பாதித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பாடநெறியின் கீழ் 10,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். முதலாவது வருடத்தில் மாணவர்கள் ஒரு சில பாடங்களைக் கற்க வேண்டியதுடன், இரண்டாவது வருடத்தில் விசேட பட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். இதன்படி தகவல் தொழில்நுட்பம், Computer science> software engineering> Data science>, போன்ற பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

மேலும், இப்பாடநெறிக்கு குறைந்தபட்சக் கல்வி தகுதியாக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஏதேனுமொரு துறையில் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல். (ஒரே தடவையில் அல்ல) தாம் வசிக்கும் பிரதேசத்திலிருந்தே தமது தொழில் அல்லது ஏனைய விடயங்களுக்கு தடைகள் இல்லாமல் இந்தப் பாடநெறியைத் தொடர முடியும். மேலும் இந்தப்பாடநெறியானது, வார இறுதி நாட்களில் இடம்பெறுவதுடன், தொழில் செய்துகொண்டே இப்பாடநெறியைக் கற்க முடியும். மற்றும் 50 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் வீதம் வழங்கப்படும்.

அத்துடன் பாடநெறிக் கட்டணத்தை செலுத்த மற்றும் கணனிகளைக் கொள்வனவு செய்வதற்கும் விசேட கடன் சலுகைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

இங்கு கருத்து தெரிவித்த ஸ்லெஸ்கொம் நிறுவனத்தின் தலைவர், 2025 ஆம் ஆண்டளவில் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளி நாட்டு வருமானத்தை உழைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.

மேலும் இதற்காக சுமார் 2 லட்சம் மனித வளங்கள் தேவையானபோதிலும் நாட்டில் தற்போது வரைக்கும் ஒரு லட்சத்துப் பதினையாயிரம் மனித வளங்களே காணப்படுகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு குறைந்தபட்சம் வருடம் தோறும் கிட்டத்தட்ட 12000 பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய வேண்டும்.

அத்துடன், இந்த மனித வளமானது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாத்திரம் என்பதுடன், வங்கி உட்பட ஏனைய நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக விசேட கேள்வியொன்றும் காணப்படுகின்றது.

You might also like