இலங்கையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு வழக்கு..!!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்கள் 1,500 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை தயாராகியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.பல பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பனை

செய்தல், விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, அரிசியைப் பதுக்கியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு உட்பட்டுள்ளனர்.இவ்வாறு தவறிழைப்போரை கைது செய்யுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

You might also like