கொழும்பு வாழ் மக்களுக்கு ஏற்படவுள்ள அவல நிலை!
கொழும்பு நகரில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமொன்று இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு நேற்று சரிந்து விழுந்ததனை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் கொழும்பு நகரில் சேகரிக்கும் கிட்டத்தட்ட 10 டன் குப்பையை கொட்டுவதற்கு விரைவில் மாற்று இடமொன்றை அடையாளம் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறில்லை எனில் கொழும்பு மக்கள் பாரிய பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என கொழும்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலைமைக்கமைய இனிமேல் மீத்தொட்டமுல்லவில் குப்பை கொட்டுவதற்கான வாய்ப்பு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு நகரில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்காக மாற்று இடங்கள் தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
பிலியந்தலை, கரதியான, யாஎல மற்றும் புத்தளம் ஆகிய இடங்கள் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கொழும்பில் சாதாரணமாக மூன்று நாட்களுக்கு மேல் குப்பைகள் அகற்றப்படா விட்டால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.