புத்தாண்டை முன்னிட்டு மேலும் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் மேலும் சில பொருட்கள் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நாட்டின் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய விலையின் கீழ் இந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சந்தையில் 150 – 165 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் கறுப்பு சீனி ஒரு கிலோ கிராம் 115 ரூபாயக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது

வணிக கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படும் 100 கிராம் தேயிலை 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நாளை மறுதினம் முதல் 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போது 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் சோயா எண்ணெய் 310 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும்.

SLS சான்றிதழ் கொண்ட முகக் கவசம் ஒன்று 14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அத்துடன் அப்பியாச கோப்பிகளின் தற்போதைய விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய விலையின் கீழ் இந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

You might also like