க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் விரைவில் – பீரிஸ்

க.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் இறுதிக்குள் கிடைக்கும் என்று நம்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

குறித்த ஊடக சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, யூன் மாதத்திற்குள் க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகளை வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக முடிவு எடுக்கப்படவில்லை. அந்தவகையில் கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like