கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 22 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம்

22 கோடி ரூபாய் பெறுமதியான 17 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொண்டு செல்ல முயற்சித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நிறுவனத்தின் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபராகும்.போ.தை பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க பிரிவு அதிகாரிகளினால் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like