கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் கவலையான செய்தி..பண்டிகைக் காலத்தின் பின் ஏற்படப் போகும் மாற்றம்..!

பண்டிகை காலத்திற்குப் பிறகு கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று அனைத்து இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த விஷயத்தை வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடுவார் என்று நம்புகிறேன் என்றார்.

அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி மக்காச்சோளம் உத்தரவாத விலையில் வழங்கப்பட்டால் விலை அதிகரிப்பு இருக்காது என்று கூறினார்.

வர்த்தமானி அறிவிப்பின்படி கோழி இறைச்சியின் விலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தோல் உரிக்கப்படாத ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.430 ஆகவும், தோல் உரிக்கப்பட்ட கோழி இறைச்சி ரூ .500 ஆகவும் உள்ளது.இருப்பினும், விலங்குகளின் தீவனத்திற்கு மக்காச்சோளம் பயன்படுத்தப்படுவதால் அதன் விலைகள் அதிகரித்து செல்வதால், எதிர்காலத்தில் கோழி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறினார்.

கோழிப் பண்ணையாளர்கள் இறைச்சியின் விலையை நிலையாக பராமரிக்க வேண்டுமெனில், அவர்களிற்கு மக்காச்சோளத்தை ரூ 60 க்கு வழங்குமாறு கோரியுள்ளார்,

You might also like