மீண்டும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பம் : பாரிய விமானங்களும் தரையிறங்கும்

மீண்டும் யாழ்ப்பாணம் – சென்னை

கோவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகளில் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் சில மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

மாலைதீவை இணைத்து தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கு பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறினார்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன, அவை மூன்று கட்டங்களாக நிவர்த்தி செய்யப்படும்.

மூன்றாம் கட்டத்தில் ஓடுபாதை வடக்கே 3,200 மீற்றர் வரை விரிவுபடுத்தப்பட்டு பாரிய விமானங்களை தரையிறக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளது.

ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலைய முனையமும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

You might also like