24 மணி நேரத்திற்குள் தலைநகரில் மட்டும் 185 பேர் விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் மட்டும் 185 பேர் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு பண்டிகைக்காலத்தில் இடம்பெற்ற விபத்துக்களை விட குறைவானவை என தேசிய வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய பண்டிகை காலத்தில் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப் பிரிவில் 185 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று 2 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like