வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்ப்போம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைவரும் உள்நாட்டு முருங்கை மரமொன்றை வளர்ப்பதற்கு முயற்சிப்பது உசிதமானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாட்டின் சௌபாக்கியத்தையும் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் உருவாக்குவதற்கு முருங்கை மரமொன்றை வளர்ப்போம் என அவர் கோரியுள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முருங்கைக்காயை ஏற்றுமதி செய்கையாக மேற்கொண்டால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு தீர்வு எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like