காட்டு யானையின் தாக்குதலுக்கு பயந்து மரத்தில் புத்தாண்டு கொண்டாடிய குடும்பம்

காட்டு யானை தாக்குதல் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் குடும்பம் ஒன்று வித்தியாசமான முறையில் புத்தாண்டு கொண்டாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

மொனராகலை, இதிபதுர கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மரத்தின் மீது உள்ள கிளை ஒன்றிலேயே இவர்கள் புத்தாண்டினை கொண்டாடியுள்ளனர்.

குறித்த கிராமத்தில் கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் தொடர்ந்து காட்டு யானை தாக்குதல் மேற்கொள்வதனால் அங்கிருந்து அனைவரும் வேறு பகுதிக்கு சென்றுள்ளனர்.

தற்போது அந்த கிராமத்தில் வசந்த குமார என்பவரின் குடும்பத்தினர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்.

காட்டு யானைக்கு பயந்து அவர்கள் தங்கள் மகளை உறவினர்கள் வீட்டில் விட்டுள்ளனர்.

விவசாயம் செய்து குடும்பம் நடத்தும் அவர்கள் மிகவும் வறுமையில் தங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டினை மர கிளையில் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தனமல்வில கிதுல்கோட்டே பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் தலமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

60 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் பிரேதம் தனமல்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

You might also like