புத்தாண்டினை முன்னிட்டு 2 நாட்களுக்கு ம.துபானசாலைகள் பூட்டு

தமிழ் – சித்திரை புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு எதிர்வரும் 13, 14 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து ம.துபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை ம.துவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கலால் உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள ம.துபான நிலையங்கள் திறந்திருக்கும்.

அதேபோன்று ஏப்ரல் 26 பெளர்ணமி தினத்தன்றும் நாட்டின் அனைத்து ம.துபான சாலைகளையும் மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக் காலகட்டத்தில் ஆல்கஹோல், போ.தைப்பொருள் மற்றும் புகையிலை கு.ற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க 1913 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You might also like