27 வயது இளைஞரொருவர் கைது : வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபா பணம்

இரத்மலானை பகுதியில் வைத்து 27 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

136 மில்லியன் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like