முல்லைத்தீவில் கூட்டமைப்பு பிரமுகரின் வாகனத்துடன் மோதிய இராணுவ வாகனம்

முல்லைத்தீவு வெள்ளாங்குளம் பகுதியில்

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் பொருளாளருமான விந்தன் கனகரட்ணம் பயணம் செய்த வாகனம் முல்லைத்தீவு வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தின் வாகனம் மோதியதால் இன்று மதியம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று, வெள்ளாங்குளம் ஊடாக துணுக்காய் சென்று கொண்டிருந்த விந்தன் கனகரட்ணத்தின் வாகனத்தை, வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இராணுவத்தின் வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது

You might also like