சுற்றுலா பயணிகளின் படகுகளில் திடீர் தீ விபத்து

வெலிகம – மிரிஸ்ஸ மீனவத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுற்றுலா பயணிகளின் படகுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், திடீர் தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மாத்தறை மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like