எதிர்வரும் 12ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 2021 ஏப்ரல் 12ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.

புதுவருடத்துக்கான ஆயத்தங்களுக்காகவே இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்கிழமையும், புதன்கிழமையும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like