நாயை தூ.ண்டி விட்டு பொலிஸ் உத்தியோகத்தரை க.டிக்க செய்த நபர் கைது

கடமை நி.மித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை நாயை தூ.ண்டி விட்டு க.டிக்க செய்து காயத்தை ஏற்படுத்திய கு.ற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மினுவங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 12ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மினுவங்கொடை – நில்பானகொடை பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை என்பதால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சந்தேகநபரின் வீட்டுக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்கு சென்ற போது சந்தேகநபர், வீட்டில் வளர்க்கும் நாயை அழைத்து தூ.ண்டி விட்டு, அவர்களை க.டிக்க செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காலை க.டித்துள்ளதால் காயமடைந்த அவர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

You might also like