வெளிநாட்டு சேவைக்கு தகுதி வாய்ந்தவர்களை தெரிவு செய்வது தொடர்பாக வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தகுதி பெற்ற 40 பேரை தெரிவு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களம் நடத்தும் பகிரங்க போட்டி பரீட்சையின் மூலம் சில வருடங்களுக்கு ஒரு முறை வெளிநாட்டு சேவைக்கான அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இலங்கை வெளிநாட்டு சேவைக்கான அதிகாரிகளை நியமிக்கும் அரச சேவை ஆணைக்குழு உருவாக்கும் சட்டத்திட்டங்களுக்கு அமைய வெளிநாட்டு சேவைக்கான அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்படுவோருக்கு வெளிவிவகார அமைச்சில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுடன் ,அவர்களுக்கு 67 வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் சேவையாற்றும் சிறப்புரிமை கிடைக்கும் எனவும் வெளிவிகார அமைச்சு கூறியுள்ளது.

You might also like