வடக்கில் மட்டும் அமைக்கப்படும் 82 பாரிய பாலங்கள்

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஆயிரம் பாலத் திட்டத்தில் வடக்கில் மட்டும் 82 பாலங்களை அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கிடைக்கபெற்ற பாலங்களில் தற்போது 32 பாலங்களின் நிர்மாணப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாக வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பாலங்களானது மழைக்காலத்தில் பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் வடக்கில் மொத்தம் 82 பாலங்களை அமைக்க அனுமதி கிடைத்ததுடன், இன்றுவரை 32 பாலங்களின் நிர்மாணப் பணி­கள் நிறைவு பெற்றுள்ளது.

மிகுதி 50 பாலங்களின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு இறுதி பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற அதிகளவு வீதி விபத்துக்கள் பலங்களிலேயே அதிகளவில் இடம்பெற்றுள்ள நிலையில், வடக்கில் இந்த பாலங்கள் அமைப்பானது வடக்கு மக்களுக்கு நன்மை என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like