இலங்கையில் வரலாறு காணாத வகையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு

கோட்டையில் இன்று கோழியின் விலை வரலாறு காணாத வகையில் வெகுவாக உயர்ந்துள்ளதாக கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 700 ரூபாய் வரை அதிகமாக இருந்தது.

தற்போதைய விலையில் கோழியை விற்க முடியாது என்பதால் கடைகளை மூடிவிட்டதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

அதிக விலை காரணமாக தங்கள் கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கோட்டை கோழி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம் இக்பால் கூறினார்.

அடுத்த சில நாட்களில் ஒரு கிலோ கோழியின் விலை ரூ .1,000 ஆக உயரக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.கோழி பண்ணை உரிமையாளர்கள் கோழியை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

You might also like