யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் ம.ரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து வந்த ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த போத்தல் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர் பருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அருந்தியவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உ.யிரிழந்துள்ளார்.

உ.யிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் என்று தெரியவந்துள்ளது.

ஆதார வைத்தியசாலை பி.ரேத அறையில் ச.டலம் வைக்கப்பட்டுள்ளது.குறித்த போத்தலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அங்கு ஆய்வுகூடத்தில் அதனை பரிசோதித்த போது அது காயத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறிட் என தெரியவந்தது.

உடனடியாக வைத்தியர்கள் இத்திரவத்தை அருந்திய சகலரையும் வைத்தியசாலைக்கு வருமாறு பணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

You might also like