வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமானம் ( படங்கள் இணைப்பு)
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று 02.01.2017 காலை 9.00மணியளவில் அரசாங்க அதிபர் எம்.பி. றோஹன புஸ்பகுமார தலைமையில் அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றது.
தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் சமய மதத் தலைவர்களின் ஆசி செய்தியினையடுத்து அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமானம் இடம்பெற்றது
மாவட்ட செயலகத்தின் அனைத்து நிர்வாக கிளையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு தமது சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டனர்.
கடந்த யுத்தத்தின் பொது உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.