கிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா? களத்தில் உறுப்பினர்கள்

கிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா? களத்தில் உறுப்பினர்கள்

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட எடுத்த முயற்சியினை அடுத்து அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என தெரிவித்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

You might also like