5 வயது சிறுமி- 8 வயது சிறுவனுக்கு திருமணம்: அதிர வைக்கும் காரணம்

இந்தியாவில் தந்தை செய்த குற்றத்திற்காக 5 வயது மகளுக்கு திருமணம் செய்து வைக்க பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் குணா மாவட்டம் தாராப்பூர் கிராமத்திலே இச்சம்பம் நடந்துள்ளது.

அக்கிராமத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை பசு ஒன்றை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் மங்கள காரியம் நடக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரித்த தாராப்பூர் கிராம பஞ்சாயத்து, பசுவை கொன்றவரின் 5 வயது சிறுமியை 8 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர் தவறு செய்ததாகக் கூறி, சிறுமிக்கு கல்யாணம் செய்துவைக்க உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You might also like