5,000 ரூபாய் யாருக்கு எல்லாம் கிடைக்கப்போகின்றது : வெளிவந்தது சுற்றறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களை முன்னிட்டு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவது குறித்து ஒரு புது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, பயனாளிகளை தேர்ந்தெடுப்பது 7 பிரிவுகளின் கீழ் செய்யப்படும்.

சமுர்தி பெறுநர்கள்,குறைந்த வருமானம் பெறுவோர்,முதியவர்கள்,ஊனமுற்றோர்,சிறுநீரக நோயாளிகள்,நூற்றாண்டை கடந்த முதியோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
ஒரு பயனாளியின் குடும்பத்திற்கு ஒரு பிரிவின் கீழ் மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படும்.வாக்காளர் பட்டியலில் ஒரு வீட்டு எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், துணை குடும்பங்களாக (வாடகை) வாழும் குடும்பங்களுக்கும் பணம் செலுத்தப்படுகிறது.

மேலும் 5,000 ரூபாய் இந்த கொடுப்பனவு நாளை (12) முதல் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like