வவுனியாவில் புத்தாண்டை மாற்றிஅமைத்தது யுரேனஸ் இளைஞர் கழகம்

யுரேனஸ் இளைஞர் கழக இளைஞர் யுவதிகளினால் நேற்றைய புத்தாண்டு தினத்தில் விசேட புகைத்தல் விழிப்புணர்வு தினமாக மாற்றி உள்ளனர் .

கிராமங்களில் உள்ள மக்களிடம் இது தொடர்பாக கலந்துந்துரையாடி வீடுகள் கடைகள் பொதுஇடங்கள் போன்றவற்றில் புகைத்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் சிகரட் விற்பனை செய்யாத சில்லறை வியாபாரிகளின் விற்பனை நிலையங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து செய்தியை தெரிவித்ததுடன் சிநேக பூர்வமான எமது வர்த்தகள் எனும் அடையாளத்தையும் வழங்கிவைத்துள்ளனர்.

இவ் நிகழ்வு இளைஞர் கழகத்தின் தலைவர் கௌரவ கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் இடம்பெற்றத்துடன் சிந்துஜன்,குணாலன்,சரண்ராஜ்,ஜில்டாஸ்,ரூபன்,புவிகரன்,திலுக்சிகா,சுலோஜினி ஆகிய கழக உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like