நாட்டில் கொரோனா தொற்றால் வருடத்தில் 60 நாட்கள் வரையே பாடசாலையாம் : வெளியான தகவல்

கல்வி நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பாடசாலைகள் 50 முதல் 70 நாட்கள் வரை மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 60 நாட்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

நாட்டிலுள்ள மிகவும் குறைந்தளவிலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 70 நாட்கள் வரை நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆண்டொன்றிற்கு பாட விதானங்களை நிறைவு செய்வதற்காக 210 நாட்கள் பாடசாலைகளை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like