பண்டிகைகாலத்தில் அதிகரித்த கட்டணத்தை அறவிட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து

பண்டிகைக் காலத்தில் அதிகளவில் கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

vehikles of Sri Lanka – buses – inside a bus

இவ்வாறு அதிகளவில் கட்டணத்தை அறவிடும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ் வண்டிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

புறக்கோட்டை – பஸ்டியன் மாவத்தை, கம்பஹா, கடவத்த, பியஹம, கட்டுநாயக்க, கடுவெல, நிட்டம்புவ, களுத்துறை, அளுத்கம, மத்துகம, ஹொரணை, பாணந்துறை, ஹோமாகம, நாவின்ன, பிலியந்தல ஆகிய பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவிருக்கின்றன.

உரிய முறையில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

You might also like