நீங்கள் கொள்வனவு செய்த தொலைபேசி தி.ருடப்பட்டதா? கண்டுபிடிக்க பொலிஸார் வெளியிட்ட தகவல்

இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் திருடப்பட்டுள்ளதென பொலிஸாரின் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தி.ருடப்பட்ட பெறுமதியான கையடக்க தொலைபேசி, தங்க நகைகள் உட்பட பொருட்கள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

84078482 – bride with the phone writes a message

இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நபர்களின் கையடக்க கொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிபெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தி.ருடப்பட்ட அல்லது கொ.ள்ளையடிக்கப்பட்ட அனைத்து கையடக்க தொலைபேசிகளினதும், EMI இலங்கை பொலிஸாரினால் நடத்தி முன்னெடுக்கப்படும் www.ineed.police.lk இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய எந்த ஒரு நபரும் பயன்படுத்தும் அல்லது புதிதாக கொள்வனவு செய்த கையடக்க தொலைபேசி அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பவர்கள், இந்த இணையத்தளத்திற்கு சென்று தாம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் கையடக்க தொலைபேசிகளின் EMI இலக்கம் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்து கொள்வனவு செய்யுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like