ம.துபோ.தையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யானையுடன் மோதி விபத்து

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுல கட பகுதியில் ம.துபோ.தையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யானையுடன் மோ.தி வி.பத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்றிரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு படுகா.யமடைந்தவர் கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பா.துகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.குணசேகர (43வயது) ஆவார்.

புத்தாண்டை முன்னிட்டு தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது வீதியைக் கடக்க முற்பட்ட யானையுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் இவரது மோட்டார் சைக்கிள் யானையின் தா.க்.கு.த.லி.னா.ல் சே.தமாக்கப்பட்டுள்ளது.

குறித்து சிவில் பாதுகாப்பு ப.டை உத்தியோகத்தர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like