தங்க சங்கிலிக்காக படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்
கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படுகொலை சம்பவமானது கடந்த 11ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அபகரிப்பதற்கு முயற்சி செய்த போதே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பகா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.