கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர்
திருகோணமலை நிலாவெளி, கோபாலபுரம் பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மூழ்கிய பெண்ணொருவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உயிர் காப்பு பிரிவில் பணி புரியும் கடற்படையினர் இந்த பெண்ணை காப்பாற்றியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடலில் குளித்து கொண்டிருந்த போது இந்த பெண் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான பெண்ணே இவ்வாறு காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது