நிறைகுறைந்த பாண் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்

கல்முனை பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஹோட்டலொன்றில் நிறை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் சட்டதிட்டத்திற்கு ஏற்ப விலை நிர்ணய திணைக்களமும் அளத்தல் அளவீட்டுத்திணைக்களமும் இணைந்து பாணின் நிறையும் விலையும் நிர்ணயித்துள்ளன.

இவற்றிக்கு எதிராகவும் முரணான வகையிலும் நிறை குறைந்த பாணினை தயாரித்து பண்டிகை காலத்தில் கல்முனையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒரு சாதாரண பாணின் நிறை 450 கிராம் ஆகும். ஆனால் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்களை ஏமாற்றி விடலாம் என்ற நோக்கில் 330 கிராம் நிறையுடைய பாண் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலம் என்பதால் கல்முனைப்பகுதியில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் பண்டிகை காலத்தில் இயங்கிய ஹோட்டலில் மட்டும் பாண்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.

இதனால் கல்முனையில் பாணுக்குத் தட்டுப்பாடு நிலவியுள்ளது. அதனை சாதகமாக்கிக் கொண்டு நிறை குறைந்த சுமார் 5 ஆயிரம் பாண்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு பாணில் 110 கிராமை மீதப்படுத்தி பாண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நேர்மையாகவும் தரமாகவும் தயாரிக்கும் பேக்கரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பலரும் ஏமற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like