புத்தாண்டில் நடந்த சோகம் – முதற்தடவையாக மது அருந்தியவர் மரணம்

காலியில், மதுபானம் விசமாகி ஒருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த 30 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வாழ்க்கையில் முதல் தடவையாக மதுபானம் அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவின் பிரேதப் பரிசோதனை நேற்று காலி கராபிட்டிய வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.

மதுபானம் விசமாகியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில வேளைகளில் மதுபானம் இவ்வாறு விசமாகக் கூடிய சாத்தியம் உண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்தார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like