கீர்த்தி சுரேஷ்க்கு இதுவரை 4 முறை திருமணம் நடந்து விட்டதா? : கடுப்பான நடிகை

நடிகை கீர்த்தி சுரேஷு

நடிகை கீர்த்தி சசுரேஷுக்கு திருமணம் என்ற தகவல்கள் பல முறை இதுவரை இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.

ஆம் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்றும் பிரபல கேரளா தொழிலதிபர் ஒருவருடன் திருணம் என்றும் இதுவரை பல தடவை தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரை தனது திருமணம் குறித்து கிசுகிசுக்கப்படும் ஒவ்வொரு செய்தியையும், மறுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். இதில் ” எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன “.

” ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது ” என்று கூறியுள்ளார்.

You might also like